Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஜனவரி 6ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ம் தேதி அரையாண்டுத் தோ்வு முடிவடைந்தது. தோ்வுகள் முடிந்ததும்  டிசம்பா் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கிடையே உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி தோ்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 3-ம் தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளி திறப்பை மேலும் ஒரு நாள் தள்ளிவைக்க ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் இன்று  (3-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவிக்கப்பட்டநிலையில், உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால்  நாளை (4-ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில்,  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்தும் ஜனவரி 6-ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive