தினமும் 6 மணிநேரம் வீதம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாக பின்லாந்து பிரதமர் சன்னா மரின் அறிவித்துள்ளார்.
உலகின் இளைய மற்றும் பின்லாந்து நாட்டின் தற்போதைய பிரதமர் சன்னா மரின், 34, அந்நாட்டு குடிமக்களின் வேலை நேரத்தையும், நாட்களையும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாளாகவும், அதில் 6 மணி நேரம் மட்டுமே பணி நேரமாகவும் அறிவித்துள்ளார். பணியாளர்கள், குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு வெளியிடப்பட்டதாக சன்னா மரின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மக்கள் தங்கள் குடும்பங்கள், அன்புக்குரியவர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் கலாச்சாரம் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களுடன் அதிக நேரம் செலவிட தகுதியானவர்கள் என நான் நம்புகிறேன், என்றார்.
வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் இருந்தால் நிறுவனங்களுக்கு தான் சுமை அதிகமாகும் என சில விமர்சனங்கள் வந்தாலும், பணியாளர்கள் உற்சாகத்துடன் வேலை செய்து, உற்பத்தி திறன் அதிகரிக்கும் என சிலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். குறைந்த பணி நேரம் என்பது ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. ஜப்பானில் இந்த நடைமுறையால் பணியாளர்கள் உற்சாகத்துடன் பணிபுரிவதாகவும், இதனால் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுகள் கூறியுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...