10வது கல்விஆண்டு தொடங்கவுள்ள நிலையில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழகஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:-
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 – 2012 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.
தற்போது 9வது கல்வியாண்டு முடியப்போகிறது, ஆனால் எங்களுக்கு தற்போதுவரை தொகுப்பூதியம் ரூ.7700 மட்டுமே தரப்படுகிறது. இப்போதுள்ள விலைவாசி உயர்வில் இந்த குறைந்த சம்பளத்தை வைத்து எப்படி எங்களின் குடும்பத்தை நடத்துவது என்பதை அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அரசாணைப்படி 4 பள்ளிகளில் வேலையை வழங்கியிருந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.30ஆயிரம் சம்பளம் கிடைத்திருக்கும். சம்பளத்தையும் உயர்த்தாமல், பணிநிரந்தரமும் செய்யாமல் இருப்பது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என கருணை மனுக்களை அரசுக்கு அனுப்பி வருகிறோம்.
கல்வித்துறையில் எங்களுக்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளபோது, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மாணவர்நலன் மற்றும் குடும்பநலன் கருதி காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம் என்றார். இந்த சட்டசபை தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு புதிய அரசாணை நியமித்து பணிநிரந்தரம் செய்ய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.
இங்ஙனம்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர் : 9487257203
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...