வேகமாக பரவும் கொரோனா கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?: மகப்பேறு மருத்துவர் விளக்கம்

வேகமாக பரவும் கொரோனா கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?: மகப்பேறு மருத்துவர் விளக்கம் 

வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும் என மகப்பேறு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, மகப்பேறு டாக்டர் நந்தினிதேவி கூறியிருப்பதாவது:கொரோனா தற்போது கர்ப்பிணிகளுக்கும் பரவி வருகிறது. ஆனால் அவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படுவதில்லை. சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படுத்துமோ, அதேபோல் தான் கர்ப்பிணிகளுக்கும். இருந்தாலும் கொரோனா ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

பெண்களுக்கு பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும், பிரசவ காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றம் ஏற்படும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்இதனால், கொரோனா தொற்று எளிதில் பரவும். கர்ப்பமாக இருக்கும் காலத்தில், பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பிரச்னைகள் உள்ளிட்டவை அதிகமாக ஏற்படும். எனவே அவர்கள் மீது அதிக கவணம் செலுத்த வேண்டும்.மருத்துவராக கர்ப்பிணிகளுக்கு கூறும் அறிவுரைகள் என்றால், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். 

மாஸ்க் அணிய வேண்டும். அதிலும் முக்கியமாக கருதப்படுவது கர்ப்ப கால பரிசோதனை. அதாவது, 12 வாரம், 20 வாரம், 28 வாரம், 36 வாரம் சோதனைகளை மட்டும் செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள தொற்றை பெற்றுக்கொள்ளக்கூடாது. 

சின்ன சின்ன பிரச்னைகளுக்கு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். ஆன்லைனில் மருத்துவமனையில் ஆலோசனை செய்து, வீட்டில் மருந்து பெறலாம். மருத்துவர்கள் வர சொன்னால், மட்டுமே செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவையெல்லாம் கொரோனா கிடையாது. 

உடனே மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டாம். மருத்துவரை தொடர்பு கொண்டு, கலந்து ஆலோசிக்க வேண்டும். அப்படி பரிசோதனை செய்ய சொன்னால் செய்து, அறிகுறிகள் போகும்வரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

 கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணியால், வயிற்றில் வளரும் கரு கலைவதில்லை. குழந்தைக்கு குறைபாடுகளும் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால், சில சமயங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, குறைபிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது.குழந்தையின் வளர்ச்சிகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது, பனிக்குடம் உடைவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், மிக முக்கியமாக பார்க்கப்படுவது, கர்ப்பிணி தாய்களிடம் இருந்து குழந்தைகளுக்கு சில நோய்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த கொரோனா வயிற்றில் வளரும் குழந்தைக்கு பரவாது என்று தெரியவந்துள்ளது. பிறந்த பல குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இது பிரசவத்தின்போது குழந்தைக்கு வருவதில்லை. பிறந்த பின் அங்கே இருப்பவர்கள், சுற்றி இருந்தவர்கள், பாதிக்கப்பட்ட தாய் ஆகியோரிடம் இருந்து பரவி இருக்கலாம். பொதுவாக, பிரசவத்துக்கு வரும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். 

 அவசர பிரசவம் என்றாலும், அவர்களுக்கு கொரோனா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்றுதான் டாக்டர்கள் அளிக்க வேண்டும். அறிகுறி இல்லையென்றாலும், பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கூறப்படுவது, பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்கலாமா என்பது. குடிக்கலாம்.இதன் மூலம் தாய்க்கு கொரோனா இருந்தாலும், கொரோனா பரவாது. உலக சுகாதார மையம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால், நோய் இருக்கும் தாய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதனால் பால் குடிக்கும்போது அந்த நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைக்கும் கிடைக்கும். 

எந்த ஆய்வுகளிலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் கொரோனா பரவும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தாய்ப்பால் கொடுக்கலாம். கண்டிப்பாக மாஸ்க் போன்ற கவசங்களை அணிந்துகொள்ள வேண்டும். 
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive