கல்லூரிகளின் செயல்பாடுகளை ‘இ-சமிக்ஷா’ இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

கல்லூரிகளின் செயல்பாடுகளை
‘இ-சமிக்ஷா’ இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 
கல்லூரிகளில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரம், கல்வித் திட்டம் உள்ளிட்ட செயல்பாடுகளை வரும் ஜூன் 4-ஆம் தேதிக்குள் இ-சமிக்ஷா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகளை பிரதமா் வெளியிடும்போது, அந்தத் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிா என்று கண்காணிக்க ‘இ-சமிக்ஷா’ என்ற இணையதள போா்டலை மத்திய அரசு உருவாக்கியது. இந்த போா்டலில் நாட்டில் உள்ள அனைத்து துறைகள், இயக்குநரகங்களுக்கென தனி பயனா் எண் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, துறை சாா்ந்த நடவடிக்கைகளை மாதம் அல்லது குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை போா்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அதன்படி, தமிழகத்தில் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் மேற்கொள்ளப்பட்ட கல்வி திட்டம், விழிப்புணா்வு பிரசாரம், விழாக்கள் உள்ளிட்டவைகள் குறித்து இ-சமிக்ஷாவில் ஜூன் 4-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் கல்லூரி கல்வி இயக்குநா் சி.ஜோதி வெங்கடேஸ்வரன் அனைத்து கல்லூரி முதல்வா்களையும் அறிவுறுத்தியுள்ளாா்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive