Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11ம் வகுப்பு குரூப் தேர்வுக்கு கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு



கோவை:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நடவடிக்கை, அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டாலும், பிளஸ்1 சேர்க்கையில் குரூப் தேர்வு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளதாகவும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்தி தீர்வு காணலாம் எனவும், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக, மார்ச் மாதம் நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, இம்மாதம், 15ம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.பாடாய்படுத்திய கல்வித்துறைமாநிலம் முழுவதும் தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் என, பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டன.
 ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன.பிற மாநிலம், மாவட்டங்களில், கிராமங்களில் சிக்கியிருந்த மாணவர்கள் பலர், பெரும் சிரமங்களுக்கு இடையே அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.அரசு உத்தரவிட்டு விட்டதே என, ஆசிரியர்களும், அலுவலர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, தேர்வு பணிகளை மேற்கொண்டனர்.இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள அறிவிப்பு, அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனாலும், நோய் தாக்குதலின் போக்கை கணித்து, முன்பே முடிவு எடுத்திருக்க வேண்டும் என்று, அனைவரும் ஆதங்கப்படுகின்றனர்.குரூப் தேர்வு எப்படிபத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பொறுத்தே, ஒரு மாணவன் மேல்நிலை வகுப்பில் குரூப் தேர்வு செய்ய முடியும்.
ஒரு பள்ளியை விட்டு, வேறு பள்ளிக்கு மாறும் போதும், அதே பள்ளியில் படித்தாலும், குரூப் தேர்வு செய்வதில் சிக்கல்கள் எழும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பின்தங்கிய பல மாணவ மாணவியர், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளி விடுவர்.

இது கடந்த கால வரலாறு.ஆகவே, பிளஸ்1 சேர்க்கையில் அரையாண்டு, காலாண்டு மதிப்பெண் அடிப்படையில், குரூப் தேர்வு என்பது எவ்வகையிலும், ஏற்புடையதாக இருக்காது என்கின்றனர் கல்வியாளர்கள். நுழைவு தேர்வே தீர்வு!உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் மற்றும் கல்வியாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:தேர்வு ரத்து செய்தது, அரசின் சரியான முடிவாகும். பெரும்பாலான சராசரி மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை காட்டிலும், பொதுத்தேர்வில் முழுமையாக தயார்படுத்திக்கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறுவது வழக்கம்.
இம்மாணவர்கள், பழைய மதிப்பெண்களை ஒப்பிட்டால், அவர்கள் விரும்பிய துறையை தேர்வு செய்ய இயலாது. ஆகவே, பிளஸ்1 சேர்க்கைக்கு, மதிப்பீடு குறித்த தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.பள்ளிகள் அளவில் அனைத்து பாடங்களுக்கும், ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு, பிளஸ்1 சேர்க்கையில், குரூப் ஒதுக்க நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.பார்க்கலாம்...பள்ளிக்கல்வித்துறை என்ன முடிவு எடுக்கிறதென்று! பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை பொறுத்தே, ஒரு மாணவன் மேல்நிலை வகுப்பில் குரூப் தேர்வு செய்ய முடியும். ஒரு பள்ளியை விட்டு, வேறு பள்ளிக்கு மாறும் போதும், அதே பள்ளியில் படித்தாலும், குரூப் தேர்வு செய்வதில் சிக்கல்கள் எழும்.




1 Comments:

  1. govt cancelled the 10th exam due to corona.then how can we conduct group test. it is not possible.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive