NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கால்களில் செருப்பு அணிவதால் எப்படி பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்.

கால்களில் செருப்பு அணிவதால் எப்படி பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்..
பொதுவாக நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி, தியானம், யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மேற்கொள்ளுங்கள் என்பார்கள். ஆனால் இனி மேல் அதனுடன் காலில் செருப்பு போடுவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறது ஆய்வு. ஆமாங்க நாம் காலில் செருப்பு போட்டு நடப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறதாம்.
இதுவரை வித விதமான மாடல்களில் அழகுக்காக காலணிகளை அணிந்து இருப்போம். ஆனால் உண்மையில் காலணிகள் நம் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலணிகள் போட்டு நடப்பதால் நம் முழங்கால், முதுகு இவைகளை நேராக்கி நம் உடல் அமைப்பிற்கு நல்ல தோரணையை கொடுக்கிறது. மேலும் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்க கால்கள் நாள் முழுவதும் சோர்ந்து போகாமல் இருக்க உதவுகிறது
 
கால்களும்.. செருப்பும்..*
கால்கள் தான் நம் உடலின் அடிவேர், அடித்தளம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாதங்களை பாதுகாப்பது நமது கடமை. அந்த வேலையைத் தான் நாம் அணியும் செருப்புகள் செய்கின்றன. நம்முடைய பாதங்கள் முதுகு, இடுப்பு, முழங்கால் என்று எல்லாவற்றையும் இணைக்கிறது. எனவே பாதங்கள் சரியாக இல்லாவிட்டால் உங்களுக்கு முழங்கால் மற்றும் முதுகு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
*பழங்காலத்தில் செருப்பு இருந்ததா?*
பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்த செருப்புகள் என்று எதுவும் கிடையாது. அவர்கள் காடுகளில் கூட வெறுங்காலில் நடந்தனர். தினமும் 8000 படி வீதம் நடக்க அவர்களால் முடிந்தது. புல்வெளித் தரையில் வெறுங்காலுடன் நடந்தார்கள். அப்பொழுது இயற்கையாகவே பாதங்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டன. இதனால் அவர்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரித்து, கால்களின் நிலையான மற்றும் மாறும் செயல்பாடுகளைச் செய்ய முடிந்தது.
*ஆனால் இப்போது நவீன யுகத்தில் இது சாத்தியமா?*
அந்தக் காலத்தில் நடந்தது மாதிரி இப்பொழுது தரையில் வெறுங்காலுடன் நடக்க முடிவதில்லை. இப்போதுள்ள மக்களால் 8000 படிகள் வரை ஏற முடிவதில்லை. அவர்கள் அதனால் தான் காலணி பழக்கத்திற்கு மாறினார்கள். ஆனால் தவறான காலணிகள் ஒருபோதும் உங்க நடைபயிற்சிக்கு உதவாது. சரியான காலணிகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் மட்டுமே உங்களால் நரம்புத் தூண்டல்களை பாதங்களில் பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்காக எலும்பியல், சிரோதெரபி, விளையாட்டு மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான பிரபல ஜெர்மன் மருத்துவர் டாக்டர் மெட் வால்டர் பாத நரம்புகளின் ரிஃப்ளெக்சாலஜி அறிவியலின் அடிப்படையில் 5 அம்சங்களைக் கொண்ட காலணிகளை உருவாக்கியுள்ளார்.
 
*5 அம்சங்கள்*
* நீங்கள் நடப்பதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் உங்க கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்யப்படும். 
* இப்படி செய்யும் போது உங்க பாத நரம்புகள் தூண்டப்படும். 
* இதன் மூலம் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிப்பு, ஆக்ஸிஜன் சப்ளே கிடைக்கும். இதற்கு பெயர் தான் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடு. 
* இதன் மூலம் உங்க பாத தசைகளில் ஏற்படும் பதட்டத்தை தணித்தல், கால் மற்றும் உடல் நிலையை சரிசெய்ய வேண்டும் 
* கடின பரப்புகளில் நடக்கும் போது கூட பாதங்கள் கஷ்டப்படுவதில்லை 
* கால்களுக்கு இயற்கை நெகிழ்வுத்தன்மை மற்றும் சரியான ஆதரவை கொடுக்கும்.
*ஆரோக்கியமான காலணியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:*
* நீங்கள் உங்கள் பாதங்களுக்கு சரியான காலணியை தேர்ந்தெடுத்து இருந்தால் 12 மணிநேரம் கூடுதலாக நின்று நடைபயிற்சி செய்ய கால்களை அது ஊக்குவிக்கிறது. 
* காலணிகள் காலுக்கு வலிமையை கொடுத்து உடற்பயிற்சி செய்ய ஆதரவு தருகிறது. 
* கால், முழங்கால் மற்றும் முதுகு வலி ஆகியவற்றை நீக்குகிறது 
* மூட்டுகள் மற்றும் தசைகளை பாதுகாக்கிறது 
* கால்களின் நிலை மற்றும் உடல் தோரணையை சரிசெய்கிறது
*சரியான காலணி அவசியம்..*
எனவே உங்க பாத சிக்கல்களை போக்க நீங்கள் இனி ஆரோக்கியமான காலணிகளை தேர்ந்தெடுத்தாலே போதும். ஆரோக்கியமான பாதணிகள் கால்களுக்கு தேவையான நரம்பு தூண்டுதல்களையும், ஆதரவையும் கொடுக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் காலணிகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive