Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் : பிரதமர் மோடி வலியுறுத்தல்..


நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் : பிரதமர் மோடி வலியுறுத்தல்..
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 9,900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 1.8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி இன்று 21 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், கவர்னர்கள் உள்ளிட்டோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில்,

இந்திய அரசின் முயற்சியால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி உள்ளனர்.
ஊரடங்கு தளர்வால் பொருளாதாரத்தை மெல்ல மெல்ல மீட்டு எடுத்து வருகிறோம். இந்த சமயத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களுக்கு உதவும். தனியார் துறை ஊழியர்கள் அதிகம் பணிக்கு திரும்பி வருகின்றனர். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தற்போது அதிகரித்துள்ளது.
சிறு குறு தொழில், தோட்டக்கலைத் துறை பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழலில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பொது இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். பொது மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive