உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ)
அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எல்.ஓ.வின்
உடன்படிக்கைகளின் ஏற்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது
இதன் அடிப்படையில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
2006 அக்டோபர் 10-ம்
தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஓட்டல்கள் போன்ற இடங்களில் வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது
குழந்தைகள் உலகின் எதிர்கால சந்ததியினர். அவர்களுக்கு கல்வி அளிக்காமல் பணிபுரிய செய்தது மிகப்பெரிய கொடுமையாகும். அவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது*
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...