++ அரசு பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் வேலை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Tamil_News_large_2393773

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சமூக நலத்துறை. இதற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 422

அமைப்பாளர்: 158

தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர்: 264

தகுதி: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.08.2020 தேதியின்படி 21 முதல் - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி ஆணையர்கள் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tn.gov.in/ -இல் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

2 comments:

  1. தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் உதவியாளர் பணியிடம் நிரப்புவது பெரிய விஷயம் இல்லை அதனை முறையாக எந்த ஒரு இடைத்தரகர்களுக்கும் இடமளிக்காமல் தகுதியான நபர்களுக்கு பணி வழங்க வேண்டுகிறோம்
    இந்த பணி நியமன செய்தி வந்தவுடன் நமது நாட்டில் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றியர்கள் அனைவரும் பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள் இந்த நிலையை ஒழித்து சம்பந்த பட்ட துறை நியாயமான முறையிலும் இந்த ஊழலுக்கும் இடமளிக்காமல் நூறு சதவீதம் தகுதி தேர்வு வைத்து தகுதியான நபர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டுகிறேன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...