தமிழக அரசின், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் படித்த, 10 மாணவியருக்கு, முதல் நாள் மருத்துவ கவுன்சிலிங்கில் இடம் கிடைத்துள்ளது. மேலும், 21 பேருக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக இந்தாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது.தமிழகத்தில், 972 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்ததில், 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்ற அழைக்கப்பட்டனர்
.திருப்பூர் மாவட்டத்தில், அழைக்கப்பட்ட, 31 பேரில், 10 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில், ஜெய்வாபாய் பள்ளி மாணவி சோபிகா கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளார்
பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா, பழனியம்மாள் பள்ளி மாணவி சந்தியா இருவரும் கோவை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளனர்.
பழனியம்மாள் பள்ளி மாணவியர் ஜெய்ஸ்ரீ மற்றும் ஷிபானா திருநெல்வேலி மருத்துவ கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். ஜெய்வாபாய் பள்ளியை சேர்ந்த நந்தினி, மதுரை மருத்துவ கல்லூரி, கோகிலாவாணி, லாவண்யா ஆகியோருக்கு கரூர் மருத்துவ கல்லுாரி, ஊத்துக்குளி பெண்கள் பள்ளியை சேர்ந்த காவ்யா மற்றும், உடுமலை அரசு பள்ளி மாணவிதுல் பியாவுக்கு, கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக்கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா கூறுகையில், ''பத்தாண்டுகளுக்கு முன் எங்கள் பள்ளியில் படித்த ஒரு பெண் மருத் துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சியானார்
.அதன்பிறகு கவுன்சிலிங் முதல் நாளிலே, எங்கள் பள்ளியை சேர்ந்த, நான்கு மாணவியருக்கு இடம் கிடைத்தது இம்முறையே. அரசின் 7.5 சதவீத ஒதுக்கீடு இதற்கு காரணம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...