சிவகங்கை மாவட்டத்தில் மத்திய
அரசின் 'கற்போம் எழுதுவோம்' திட்டத்தில் 5900 பேருக்கு அடிப்படை கல்வி
கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு 15
வயதிற்கு மேற்பட்ட அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு 'கற்போம்
எழுதுவோம்' திட்டம் மூலம் கல்வி கற்றுத்தரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
2020 ~~ 2021 முதல் அடிப்படை கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு பயிற்சி
அளிக்கப்படும்.
சிவகங்கையில் 5,900 பேர்களுக்கு துவக்க, நடுநிலை பள்ளிகளில் 295 மையங்களில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.295 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது, திருச்சியில் மாநில அளவிலான பயிற்சியில் மையத்திற்கு ஒரு தலைமை ஆசிரியர், இரண்டு வட்டார வள மைய மேற்பார்வையாளர் வீதம் பங்கேற்றனர்.
இவர்கள், தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பர். அடிப்படை கல்வி வகுப்பிற்கான பாடங்கள் வந்ததும், நவ.,23 முதல் கற்பித்தல் பணி துவங்கும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...