++ 7 நாட்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் தானாக மறைந்து போகும் மெசேஜ் Disappearing Messages; ON மற்றும் OFF செய்வது எப்படி? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Full Marks - Super 20 Sample Papers

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Erode

PGTRB 2021 - Best Coaching Centre in Chennai

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
WhatsApp இல் Disappearing Messages; ON மற்றும் OFF செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் சில நாட்களுக்கு முன்பு Disappearing Messages எனும் ஒரு புதிய அம்சத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இந்த அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது.


மறைந்துபோகும் மெசேஜஸ் 

வாட்ஸ்ஆப்பின் இந்த "மறைந்துபோகும் மெசேஜஸ்" அம்சம் ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அது மீடியா கோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரி அல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாக இருந்தாலும் சரி அது தானாகவே மறைந்துவிடும்.

                                                  

இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சமானது இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமின்றி iOS பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. இந்த புதிய வாட்ஸ்ஆப் அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் முதலில் வாட்ஸ்ஆப்பை அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப்பின் மறைந்துபோகும் மெசேஜஸ் அம்சமானது iOS இல் வெர்ஷன் 2.20.121 உடன் வருகிறது, இது புதிய storage management tool மற்றும் mute a chat always போன்ற அம்சங்களையும் கொண்டுவருகிறது, Mute a chat always என்பது எப்போதுமே குறிப்பிட்ட ஒரு சாட்டை ம்யூட் செய்ய உதவுகிறது.

வாட்ஸ்ஆப்பின் Disappearing Messages அம்சத்தினை பயன்படுத்துவது எப்படி? (Android OS) 

 

வழிமுறை 01 : அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்ஆப்பை ஓப்பன் செய்யவும்.

வழிமுறை 02: நீங்கள் இந்த டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் அம்சத்தை இயக்க விரும்பும் காண்டாக்ட்- தேர்வு செய்ய, குறிப்பிட்ட காண்டாக்- திறக்கவும், அதாவது அவரக்ளின் ப்ரோபைலுக்குள் செல்லவும், அதாவது சாட்டிற்குள் நுழைந்து குறிப்பிட்ட காண்டாக்டின் பெயரை கிளிக் செய்யவும்.

 

வழிமுறை 03 : அங்கே டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் எனும் புதிய அம்சத்தினை என்க்ரிப்ஷன் விருப்பத்திற்கு மேலே காண்பீர்கள். அதை கிளிக் செய்து பின்னர் குறிப்பிட்ட அம்சம் சார்ந்த தகவலை படித்துவிட்டு தொடரவும்.

 

வழிமுறை 04 : டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் என்கிற விருப்பதிற்குள், இது இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அது தானாகவே மறைந்துவிடும் என்கிற குறிப்பு இடம்பெறும் அதன் கீழே ஆன் மற்றும் ஆப் என்கிற இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். இந்த புதிய அம்சம் டீபால்ட் ஆகவே ஆப்-இல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் நீங்கள் ஆன் என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான்!

 

குறிப்பிட்ட விருப்பத்தை இயக்கிய பிறகு வாட்ஸ்ஆப்நீங்கள் disappearing messages அம்சத்தினை இயக்கியுள்ளீர்கள். 7 நாட்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து புதிய மெசேஜ்கள் மறைந்துவிடும். இதை மாற்ற இங்கே கிளிக் செய்யவும்" என்கிற தகவல் குறிப்பிட்ட சாட்டில் அணுக கிடைக்கும்.

 

இந்த disappearing messages அம்சத்தினை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றுவதற்கான விருப்பமும் உங்களுக்கு இருக்கும். புதிய disappearing messages அம்சத்தை முடக்க மேற்குறிப்பிட்ட அதே செயல்முறையை மீண்டும் செய்யவும். ஆனால் கடைசியாக ஆன் என்பதற்கு பதில் ஆப் என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.

 

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த அம்சம் இயக்கப்படும் போது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் சாட்டிலிருந்து தானாகவே நீக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

இருப்பினும், ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட மீடியா கோப்புகள் அப்படியே இருக்கும். forwarded அல்லது quoted மெசேஜ்கள் தானாக நீக்கப்படாது என்பதையும் பயனர்கள் கவனிக்க வேண்டும்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...