Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நவோதயா பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; டிச.15 கடைசித் தேதி

601444

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சேர்வதற்கு வரும் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்துப் புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:


''புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜவஹர் நவோதயா  வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

01.05.2005 முதல் 30.04.2009-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். பட்டியலின மாணவர்களுக்கும் இது பொருந்தும். தகுதிவாய்ந்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் www.nvsadmissionclassnine.in எனும் இணைய முகவரியில் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0413- 2655133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive