++ கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது”: சொல்கிறார் இம்மாநில முதல்வர் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது”: சொல்கிறார் இம்மாநில முதல்வர்

கடவுளே வந்தாலும் அனைவருக்கும் அரசு வேலை வழங்க முடியாது என கோவா மாநில பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.கரோனா பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் தொழில்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பலர் வேலை இழந்தும், குறைந்த ஊதியத்திற்கு பணி செய்தும் வந்தனர்

இந்நிலையில் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளுடன் நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் சனிக்கிழமை பங்கேற்ற கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், “கடவுளே வந்தாலும் 100 சதவீத அரசு வேலைக்கு சாத்தியமில்லை.” எனத் தெரிவித்தார்.மேலும்,  “அரசால் அனைவருக்கும் பணி வழங்கமுடியாது.” என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...