'பெற்றோரிடம் கருத்து கேட்ட பின், கல்வி தொலைக்காட்சி மூலம் போதிக்கும் முறையை தொடர்வது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள, 2,505 பள்ளிகளுக்கு, இரண்டாண்டுகளுக்கு, அதன் அங்கீகாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வாக, மாவட்ட நுாலகங்கள், மதியம், 2:00 மணி வரை இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதிக கட்டணம் வசூலிப்பதாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை.பள்ளி திறப்பு குறித்து, பெற்றோர் தெரிவிக்கும் ஒட்டுமொத்த கருத்துகளில், மைய கருத்தே முடிவாக ஏற்று கொள்ளப்படும்.
தற்போதைய கொரோனா சூழலில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே, பள்ளியை திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து தான், பெற்றோரிடம் கருத்து கேட்கிறோம்.கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாது என, பெற்றோர் கருத்து தெரிவித்தால், அதன்பின் என்ன என்பது குறித்து, அரசு பரிசீலிக்கும்.
கருத்து கேட்பு முடிந்த பிறகே, தனியார் பள்ளிகளில், 'ஆன்லைன்' வகுப்பும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலமும் போதிக்கும் முறையை மீண்டும் தொடர்வது குறித்தும், அரசு பரிசீலிக்கும். தனியார் பள்ளிகளில் இருந்து, 5.18 லட்சம் மாணவர்கள், நடப்பாண்டில்அரசு பள்ளிகளில்சேர்க்கையாகி உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...