++ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது ? ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
th

அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது, கலங்கும்  பேராசிரியர்கள். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை...


கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டு அனைத்து சான்றிதலும் இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பதுக்கு அழைப்பாணை விடுமா என தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர், தற்பொழுது தேர்தல் நெருங்கும் நேரத்தில்  நியமன பணிகள் தாமதமானால், தேர்வர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தாமதிக்க வேண்டும். கடந்த 2013 ஆண்டுக்கு  பிறகு கலை, அறிவியல் கல்லூரிக்கு எந்த ஒரு நிரந்தர ஆசிரியர்களும் நியமிக்கபடவில்லை. இதனால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலையில் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தேர்வு வாரிய இணையதளத்தை நாள்தோறும் பார்த்தபடி இருக்கும் SLET/NET/PhD முடித்தவர்கள் ஒரு வாய்ப்பு கிடைக்காத என கலக்கத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசும், உயர்கல்விதுறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் உடனடியாக பணி நியமன பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து தேர்வர்களும் மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

  இப்படிக்கு, தேர்வர்கள், தமிழ்நாடு தனியார் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு..

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...