பொதுத்தேர்வு பயம்
தமிழகத்தில் கல்வித் துறை எடுத்து வரும் நிலைப்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழ கத்தில் மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது . பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . கடந்த 8 மாதங்களாக பள்ளி , கல்லூரிகள் திறக் கப்படவில்லை . இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகள் நவ . 16 ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது .
இதையொட்டி பள்ளிகளில் நடத்தப்பட்ட கருத் துக் கேட்பு கூட்டங்களில் பள்ளி திறக்க பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . நவம்பர் , டிசம்பர் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது அப்படி திறந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் . பள்ளிகளைத் திறப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது என்றும் , கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்த பின்பு பள்ளி , கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும் பெற்றோர் , அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர் .
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண் ணிக்கை 7 லட்சத்தை தாண்டி விட்டது . சமீபத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது . இப்பி ரச்னை தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன் , பி.புகழேந்தி ஆகியோர் , “ கொரோனாவால் தற்போது இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது . இதையெல் லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கலாமே " என்று கேள்வி எழுப்பியிருந்தது . இதன் தொடர்ச்சியாக , நவ . 16 ம் தேதி பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படும் என்ற உத்தரவை தமி ழக அரசு நேற்று ரத்து செய்துள்ளது .
அத்துடன் , அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் , முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி , பல்க லைக்கழகங்கள் டிச . 2 ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது . தமிழகத்தில் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படா விட்டாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகின்றன . பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புக ளில் ஆசிரியர் பாடம் நடத்துவதற்குப் பதில் , யூடி யூப் மூலம் தான் பாடம் நடத்தப்படுவதாக புகார் உள்ளது . 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ , மாணவியர் அனைவருக்கும் ஆன்லைனில் படிக்கும் வசதி கிடைக்கவில்லை . குறிப்பாக , அரசு பள்ளி கிராமப்புற மாணவர்க ளுக்கு ஆன்லைன் வகுப்புகளைச் சந்திக்க ஆன்ட்ராய்ட் மொபைல் போன் வசதியில்லாமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .
இந்த நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அச்ச உணர்வு 10 , 12 படிக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் மனநெருக்கடியை உருவாக்கியுள்ளது . ஆசிரியர் , மாணவர் உறவே ஆறு மாதங்களுக்கு மேல் இல்லாத நிலையில் , பாடத்திட்டங்களில் சந்தேகம் என்றால் , யாரிடம் கேட்பது என்ற மனஉளைச்சல் மாணவர்கள் மத்தி யில் உள்ளது . இந்த நிலையில் பொதுத்தேர்வு என்ற பூதம் மாணவர்களை மிரட்டி வருகிறது . இந்த ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது . கொரோனா பாதிப் பால் அங்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்ப டாத நிலை உள்ளது .
எனவே , தமிழக அரசும் இந்த ஆண்டு 10 , 12 ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர் . மாணவர்கள் கடைசியாக எழுதிய தேர்வை மதிப்பிட்டு , அவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான பாடங்களைத் தேர்வு செய்வதற்கு வழிவகை செய்வதே சாலச்சிறந்தது என்ற கல்வியா ளர்களின் குரலுக்கு செவி சாய்க்குமா தமிழக அரசு ?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...