கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்காளர் சிறப்பு முகாமை நடத்த அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் டிச. 15 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்க உள்ளது
.வாக்காளர்கள் நலன் கருதி அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நவ., 21, 22ம் தேதிகளிலும் டிச., 12, 13ம் தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுகூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும் இடங்களில் தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிவடைந்த பின் கூடுதல் ஓட்டுச்சாவடிகள் எத்தனை தேவை என்ற விபரம் சேகரிக்கப்படும்.
ஓட்டுச்சாவடி அலுவலருடன் இணைந்து வாக்காளர் பட்டியலை சரிபார்க்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்களுக்கு இம்முறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் நீக்கப்பட்டவர்கள் போன்ற விபரம் இடம் பெற்றிருக்கும். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்; 'ஆன்லைனிலும்' விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...