++ கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

 


தமிழகத்தில் அடுத்தகட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாநில அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி,

TN School Open

* பள்ளிகளில் நுழையும் போது ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.


* வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இதற்காக வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்றப்பட வேண்டும்.

  

* வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அப்பகுதிகளில் தரையில் வட்டங்கள் வரைந்திருக்க வேண்டும். அதில் மாணவர்கள் இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.

 

* காலை வழிபாட்டுக் கூட்டம், மாணவர்கள் கூடுதல், விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும். நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

 

* பள்ளி ஆய்வகம், வகுப்பறை, பொதுப் பயன்பாட்டு இடங்களை 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் கரைசல் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* மாணவர்கள் கைகழுவுவதற்கு சோப்பு, சானிடைசர்கள் உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும். உரிய தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

* பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவேட்டிற்கு பதில் தொடுதல் இல்லாத வகையில் வருகைப் பதிவேடு வைத்திருக்க வேண்டும்.

 

* மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதி இதுதான்; ஆன்லைன் வகுப்பிற்கு குட் பை!

 

* பள்ளி லிஃப்ட்கள், படிக்கட்டுகள், கைப்பிடிகள் ஆகியவற்றைத் தொடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

 

 * மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால் உடனே தெரிவிக்க வேண்டும்.

* ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

 

* மாணவர்கள் தங்களது நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில், அழிப்பான், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...