தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி 'டிவி'யில் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன.
இந்நிலையில், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வரும், 14ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், அன்று மட்டும் வகுப்புகள் இல்லாமல், 'ஆன்லைனில்' பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு, தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...