முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5
லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில்அளிக்க வேண்டும்.
மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களை பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம் பெற்று இருக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருப்பவர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழக முகாம்களில் உள்ள இலங்கையை சேர்ந்த தமிழர்கள் முகாம்களில் தங்கி
இருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இந்த
திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெற்றுள்ளனர்சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சீபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், நெல்லை மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்றுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...