மத்திய அரசின் கடிதங்கள் மற்றும்
21.10.2020 அன்று நடைபெற்ற Project Approval Board ( PAB ) கூட்ட
முடிவுகளின் படி , தமிழகத்தில் , 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை
அடிப்படையாகக் கொண்டு , 15 வயதுக்குமேற்பட்ட முற்றிலும் எழுதவும் ,
படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு , அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும்
நோக்கில் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் , பள்ளி சாரா
மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம்
என்கிற புதிய வயது வந்தோர் கல்வித் திட்டத்தை , மத்திய மற்றும் மாநில
அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் , அனைத்து மாவட்டங்களிலும்
செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக , கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரைக் கண்டறியும் பணிகள் மற்றும் மையங்களை அடையாளம் காணும் பணிகள் அனைத்து மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை சார்ந்த எண்ணிக்கை விவரங்கள் அனைத்தும் Google Spread Sheet வாயிலாக இவ்வியக்ககத்தினால் பெறப்பட்டுள்ளன. மாநில திட்ட இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலர் , தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையம் அவர்களின் வழிகாட்டுதல்களின் படி , தற்போது , அனைத்து மாவட்டங்களிலும் பெறப்பட்ட கற்போர்கள் ( Learners ) மற்றும் தன்னார்வல ஆசிரியர்கள் ( Volunteer Teachers ) ஆகியோரின் பெயர் , வயது , ஆதார் எண் உள்ளிட்ட இதர விவரங்களை TN - EMIS கைபேசி செயலி வாயிலாக கீழ்கண்டுள்ளவாறு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...