இதற்கிடையில் இன்று மார்ச் 11 மகா சிவராத்திரி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதற்கிடையில் நாளை மட்டும் வங்கிகள் செயல்படலாம், மீண்டும் மார்ச் 13 அன்று இரண்டாவது சனிக்கிழமையாகும். இதே மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும்.இதனை தொடர்ந்து மார்ச் 15, 16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

வங்கி சேவைகள் தடைபடலாம்

ஆக அடுத்தடுத்து வங்கிகள் வெள்ளிக்கிழமை தவிர 5 நாட்கள் வங்கி சேவை தடைபடலாம். இதனால் ஏடிஎம் சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஜனவரி மாதத்தில் தான் வங்கிகளுக்கு பண்டிகை காரணமாக அதிக விடுமுறைகள் இருக்கும். அதன் பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விடுமுறை நாட்கள் என்பது மிக குறைவாகவே இருக்கும்.

வங்கி சேவைகள் தடைபடலாம்

வங்கி சேவைகள் தடைபடலாம்

ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் விடுமுறை நாட்கள் அதிகமாக உள்ளது. காரணம் மார்ச் மாதம் 11ம் தேதி மகா சிவராத்திரி விடுமுறை, அதனை தொடர்ந்து 13 மற்றும் 14 தேதிகளில் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. பின்னர் மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

முன் கூட்டியே தயாராகிக் கொள்ளுங்கள்

ஆக மொத்தத்தில் தொடர்ந்து 5 நாட்கள் தடைபடலாம் என்பதால் ஏடிஎம்களில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. சில வங்கிகள் 2000 ரூபாய் நோட்டினை ஏடிஎம்மில் தடை செய்துள்ள நிலையில், விரைவில் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,போராட்டம் எதற்காக கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.

இந்த போராட்டத்தில் பல வங்கி ஊழியர் சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த போராட்டமானது வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்க்கும் ஒரு போராட்டமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.