NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக் கல்வி- அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் எற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ | மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குதல் பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வெளியீடு

பள்ளிக் கல்வி- அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் எற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ | மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குதல் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்- அறிவுரைகள் வழங்குதல் ;

இத்திட்டத்தின் கீழ் இதுவரை விண்ணப்பம் செய்யாத மாணாக்கர்கள் எவரேனும் தங்கள் பள்ளியில் இருப்பின் இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம் . அவ்வாறு விண்ணப்பம் செய்ய கீழ்க்காண் விபரங்களை இணைத்து 4 நகல்கள் தயார் செய்து சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்டக்கல்வி அலுவலர் விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து 3 பிரதிகளில் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 இணைக்கப்படவேண்டிய நகல்கள் விவரம் :

 1. பெற்றோர் / பாதுகாவலரின் விண்ணப்பம் 

2. மாணவ மாணவியர்கள் சார்பான விவரப் படிவம் ( Bio - data Form ) ( தலைமையாசிரியர்மூலமாக ) 

3. தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதம் 

4. முதல் தகவல் அறிக்கை நகல் ( FIR Copy ) 

5. இறப்புச் சான்று ( Death Certificate ) 

6.cuflod error ( Legal Hair Certificate ) 

7. மாணவ / மாணவியர்கள் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டைகளின் நகல் ( Aadhaar Card Xerox Copy ) 

8. பலத்த அல்லது சிறிய காயம் அடைந்த மாணவர்களுக்கு நிவாரண உதவி பெறுவதற்கு பாதிப்பு அடைந்த மாணவரின் முழு புகைப்படம் 

9. மருத்துவரின் சான்று 

10. மாவட்டக் கல்வி அலுவலரின் பரிந்துரைக் கடிதம்


மாணாக்கரின் புகைப்படங்கள் உள்ள ஆவணங்களில் சம்மந்தப்பட்ட மாணவரின் புகைப்படம் பள்ளிச் சீருடையில் இருக்க வேண்டும். படிப்புச் சான்றில் சம்மந்தப்பட்ட மாணவரின் புகைப்படம் ஒட்டப்பெற்று தலைமையாசிரியரால் சான்றொப்பம் இடப்பட வேண்டும் . ( மாணாக்கர் இறந்திருப்பின் இந்நிபந்தனை பொருந்தாது ) . ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் இருப்பின் கருத்துருவினை தனித் தனியாகத் தயார் செய்து அளிக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive