Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு- ஊதியம் சார்ந்து உயர்நீதி மன்றம் உத்தரவு- Judgement Copy avail

ஊரக பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பெருமக்களுக்கு ஒரு முக்கிய செய்தி:ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சுகாதார பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படவில்லை. இது சார்ந்து சேலம் பாலகுட்டப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுகாதார பணியாளர் தொடர்ந்த வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்மனுதாரருக்கும் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கி அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து 120 நாட்களுக்குள் ஆணை பிறப்பிக்கு மாறு ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கும் ஊரக வளர்ச்சி இயக்குனருக்கும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளது.

எனவே தங்கள் பள்ளிகளில் இருந்தும் சுகாதாரப் பணியாளர்களின் கோரிக்கை மனுக்களை ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கும் இயக்குனருக்கும் நீதிமன்ற ஆணை நகலுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மனுவின் மாதிரியும் நீதிமன்ற ஆணையும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

judgement copy click here  

மனுவை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்து  கொள்ளவும்

 New Representation  Letter- pdf file- click here

 New Representation  Letter- word format - click here

இந்த வாய்ப்பு ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும். Town‌ Panchayats, Municipalities, Corporations பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இது பொருந்தாது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive