NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27.09.21

    

திருக்குறள் :

அதிகாரம்: கல்வி 

குறள் எண்:393 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். 

பொருள்: கண்ணில்லாதவராக இருப்பினும், அவர் கற்றவராக இருந்தால் அவர் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்கு கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்

பழமொழி :

Anything valued where it belongs.


எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு


இரண்டொழுக்க பண்புகள் :

1. பொறுமையை விட மேலான தவமில்லை எனவே எப்போதும் பொறுமையாக இருப்பேன் .

2.திருப்தியை விட மேலான இன்பமில்லை எனவே எனக்கு உள்ள பொருட்செல்வம் போதும் என்று இன்புற்று இருப்பேன்

பொன்மொழி :

 ஆணவத்தையும் பொறாமையையும் விட்டுவிடுங்கள்.பிறருக்காக கூடி உழைக்கும் கற்றுக்கொடுங்கள். இது நாளைய சமுதாயத்திற்கு நாம் தரும் பரிசு... விவேகானந்தர்

பொது அறிவு :

1."உலக மூங்கில் தினம்" எப்போது கொண்டாடப்படுகிறது? 

செப்டம்பர் 18.

2."இந்திய பொறியாளர்கள் தினம் "எப்போது கொண்டாடப்படுகிறது? 

செப்டம்பர் 15.

English words & meanings :

Wave - a line of water moving across the surface of the ocean. அலை. 

Wave - moving hands from side to side. கையை அசைத்தல்

ஆரோக்ய வாழ்வு :

வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையின் நன்மைகள்

1)உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையும். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

2)வெந்தயக் கீரையை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

3)வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

4)வெந்தயக் கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண் பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்த சோகை ஆகியவை குணமடையும்.

வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.

5)பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கணினி யுகம் :

Alt+0176°  (degree symbol)
Alt+0177±  (plus/minus symbol)

செப்டம்பர் 27:

உலக சுற்றுலா நாள் (World Tourism Day)

உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்ட நாள் 

கூகுள் (Google) என்பது, அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது. கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். 1998இல் லாரி பேஜ்சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு, 2004இல் நடைபெற்றது


நீதிக்கதை

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது. 

தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார். 

பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய் 

உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான். 

மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை. 

பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான்.

நீதி :

அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.

இன்றைய செய்திகள்

27.09.21

◆விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று எச்சங்கள்: அகழாய்வு அறிவிப்பை வரவேற்கும் ஆய்வாளர்கள்.

◆நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்க தேவையின்றி இணையவழி முன்பதிவு செய்யும் வசதி: தமிழக அரசு அறிமுகம்.

◆பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை ஆக்கிரமிப்புகளில் இருந்து முழுமையாக மீட்டு பறவைகள் சரணாலயமாகவும், அரிய தாவரம், விலங்கினங்களின் சுற்றுச்சூழலியல் வாழ்விடமாகவும் மாற்றும் சாத்தியக்கூறுகளை ஆராய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

◆ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்கான வழி காட்டுதல்களை மத்திய பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

◆பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி பின்பற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

◆கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தடையை நாளை முதல் நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

◆பெண்கள் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி.

◆உலக வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

Today's Headlines

★ 5 thousand year old historical relics were found at Vembakkottai , Virudhunagar District: Researchers are eagerly waiting for the announcement of the excavation.

Online booking facility is introduced by the government of Tamilnadu for the procurement of paddy in the respective centres 

 ★The High Court has directed the Government of Tamil Nadu to take steps to fully reclaim the Pallikaranai swamp from encroachments and do the needful research to convert it into a bird sanctuary and an ecological habitat for rare plants and animals.

  The Central  Education Department has published guidelines for protecting students from online games.

  The Supreme Court has quashed an order issued by the Chennai High Court that the 10 per cent reservation for the economically backward classes cannot be followed without the permission of the Supreme Court.

 ★ The Government of Canada has ordered the lifting of the ban on passenger flights from India due to the spread of the Corona virus from tomorrow.

  Women's Cricket: India win the 3rd ODI against Australia.

  India wins 2 silver medals in World Archery Championship


Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive