1 முதல் 8-ம் வகுப்பு வரை நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பில் மறுபரிசீலனை இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

722446

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவ.1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித் திட்டம், மாநில விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் திருச்சியில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவுத் தூண் பகுதியிலிருந்து மாரத்தான் ஓட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘1 முதல் 8-ம்வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவ.1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்தும் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. அவற்றைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதற்குப் பிறகுதான் நவ.1-ம் தேதியன்று பள்ளிகள் திறப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சிவராசு, எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.செல்வம், பதிவாளர் கோபிநாத், நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்ச்சி அலுவலர் லட்சுமி பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உப்பு சத்தியாக்கிரக நினைவுத்தூணில் தொடங்கிய மாரத்தான், அங்கிருந்து ரயில்வே ஜங்ஷன், மன்னார்புரம் வழியாகச் சென்று அண்ணா விளையாட்டரங்கத்தில் முடிவடைந்தது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive