நீட் விண்ணப்பத்தில் முகவரி, கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய அக்.10 வரை அவகாசம்..!

neet
 நீட் தேர்வு முதற்கட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் முகவரி, கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய அக்.10 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

நடப்பாண்டில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்ந்து 10ம் வகுப்பு, பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 செய்முறை தேர்வு அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து வந்தனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

முதல் கட்ட தேர்வு வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தேர்வுக்கான வேலைப்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நீட் விண்ணப்பத்தில் குடியுரிமை, கல்வி தகுதி, முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்ய அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தங்களின் விண்ணப்பங்களை திருத்திக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

1 Comments:

  1. அது NEET இரண்டாம் கட்ட தேர்வுக்கான ஏற்பாடுகள் அல்ல. NEET தேர்வுக்கான பதிவை காலமின்மை காரணமாக இரண்டு பகுதிகளாக பிரிந்திருந்தார்கள். முதல் பகுதியை மட்டும் பூர்த்தி செய்து NEET தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இரண்டாம் பகுதியை பூர்த்தி செய்து பதிவை முழுமையாக முடிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பதிவிடும் நபர்கள் விஷயங்களை முழுமையாக தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive