கடலூர் மாவட்டத்தில் எதிர்பாராத தொடர் மழையின் காரணமாக 1.11.2021 முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து , கடலூர் , மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் பார்வை 5 ன்படி , நாளை 13.11.2021 முதல் 9 முதல் 12 - ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கும் , 15.11.2021 முதல் 1 ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இன்று 12.11.2021 அன்று அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளுக்குச் சென்று பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
> பள்ளி வளாகம் துாய்மை செய்தல் வேண்டும் . இருப்பின் அவை அகற்றப்படுதல் வேண்டும் . வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . முட்புதர்கள் ஏதேனும் மழை நீர் தேங்கியிருப்பின் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
> குடிநீர் தொட்டிகள் , மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் தூய்மைப்படுத்துதல் வேண்டும் . கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும் . மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்
கட்டடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காவண்ணம் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்
> பள்ளி கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பராமரிக்கப்பட்டு பபூ பயன்படும் நிலையில் இருத்தல் வேண்டும்.
மேலும் கோவிட் -19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றிடவும் , அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . நாளை ( 13.11.2021 ) பள்ளி செயல்பட தயார்நிலையில் உள்ளது குறித்த அறிக்கையினை இன்று ( 12.11.2021 ) மாலை 4.00 மணிக்குள் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...