Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.11.21

  

 

 திருக்குறள் :

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்

மு.வ விளக்க உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

பழமொழி :

Don't  count  your chickens before they are hatched.


 மாளிகை வரும் முன்னே மனக்கோட்டை கட்டாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.


2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.

பொன்மொழி :

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்------ அப்துல் கலாம்

பொது அறிவு :

1. அகச்சிவப்பு கதிர்களை எது அதிகம் ஈர்க்கும்?

 தண்ணீர். 

2. உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கம் எங்கு உள்ளது? 

தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லியில்

English words & meanings :

Crafty person - a cunning dishonest person - தந்திரமான நேர்மையற்றவர், 

alarmed - frightened of something, எதையோ பார்த்து பயப்படுதல்

ஆரோக்ய வாழ்வு :

சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும்  செம்பருத்தி




செம்பருத்தியை பயன்படுத்தி சிறுநீர் பை, கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு.  ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.

ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.

கணையத்தில் உண்டாகும் கட்டிகள் கரையும். சிறுநீர் பையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.

செம்பருத்தி இதயத்தை பலப்படுத்துகிறது. காயவைத்த செம்பருத்தி பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இதை பயன்படுத்தியும் தேனீர் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டுவர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை உருவாக்கும்  நச்சுக்களை செம்பருத்தி வெளியேற்றும்.

கணினி யுகம் :

Alt + 0224 - à. 

Alt + 0232 - è

நீதிக்கதை

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”
 திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.

பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”

பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. 

“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

நீதி : பேரரசை பெரு நட்டம்

இன்றைய செய்திகள்

13.11.21

◆முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

◆புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

◆அரசு பள்ளிகள் என்பது வறுமை யின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

◆மலிவு விலை தேயிலை இறக்குமதியால் உள்நாட்டில் தேயிலை தொழில் கடும் பாதிப்பு.

◆கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்களில் நிறைய ஆபத்துகள் உள்ளன என்று முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

◆ஐரோப்பிய நாடுகளில் வேகம் எடுக்கும்கொரோனா பாதிப்பு.

◆அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது.

◆2022 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் தென் அமெரிக்க அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றுள்ளது.

◆தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்றார் கீதா போகத்.

◆உலக பெண்கள் டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் கோன்டாவெய்ட், பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றி.


Today's Headlines

 🌸The Indian Army has signed a memorandum of Understanding with the Central University of Pondicherry for Indian Army officers to pursue postgraduate and research courses.

 🌸The Chennai Meteorological Department has announced that a new depression is developing

 🌸Education Minister Mr. Anbil Magesh said that "let us improve the standard of government schools so let them become a sign of pride  not a sign of poverty" 

🌸 The inland tea industry was severely affected by cheap tea imports.

 🌸 Reserve Bank Governor Shakti Kantha Das has warned investors that there are a lot of risks in digital currency trades like cryptocurrency.

 🌸Corona vulnerability accelerating in European countries.

 🌸NASA, the US Astronomy Research Centre has released new images of Mars.

 🌸 Brazil is proud to be the first South American team to qualify for the 2022 World Cup.

 🌸National Wrestling Championship: Geetha Pokath wins a silver medal.

 🌸World Women's Tennis: Kontaweight, Bliskova won the opening match.
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive