NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.05.22

 

 திருக்குறள் :

பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

பொருள்
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

பழமொழி :

Never cast a clout till May be out.

கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உடல் வருத்தாமல் வந்த பொருள் நெடுநாள் நிலைக்காது. உடல் வருத்தியே பொருள் பெற்றுக் கொள்வேன். 

2. நேர்மையான முறையில் வந்த பொருள் கொஞ்சம் என்றாலும் மகிழ்ச்சியும் மன அமைதியும் தரும். நேர்மையான முறையிலே எல்லா பொருளும் பெற்றுக் கொள்வேன்.

பொன்மொழி :

ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா

பொது அறிவு :

1. வளிமண்டலம் பற்றி அறிய உதவும் அறிவியல் துறை எது?

 வானியல் (astronomy)

2. நிலநடுக்கம் பற்றி அறிய உதவும் அறிவியல் துறை எது?

நிலநடுக்கவியல் (seismology)

English words & meanings :

undergo - to have a difficult experience.இடர்ப்பாடான அனுபவம். 

Underwood - small trees and shrubs growing beneath taller trees, பெரிய மரங்கள் கீழ் வாழும் செடிகள்

ஆரோக்ய வாழ்வு :

பலாப்பழத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து  ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும்,  வழவழப்பாகவும் செய்யும்.

கணினி யுகம் :

Shift + B - Add box. 

Shift + C - Add circle

மே 02


பாவுலோ பிரெய்ரி அவர்களின் நினைவுநாள்




பாவுலோ பிரெய்ரி (Paulo Freire) ஒரு பிரேசிலியக் கல்வியாளரும், மெய்யியலாளரும் ஆவார். கற்றல் கலையில் நுண்ணாய்வுடைய திறனுடன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை என்கிற புத்தகம் அவரது சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இப்புத்தகமே ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை இயக்கத்தின் அடித்தளமாகவும் அமைந்தது

நீதிக்கதை

ஆமையும் இரண்டு வாத்துகளும்

அது ஒரு அழகிய ஏரி. அந்த ஏரியில் அழகிய ஆமை ஒன்று தனது இரண்டு வாத்து நண்பர்களுடன் வாழ்ந்து வந்தது. தினமும் அந்த இரு வாத்துகளை ஆமை சந்திப்பது வழக்கம். ஒருநாள் அந்த இரண்டு வாத்துகளும் வருத்தத்துடன் காணப்பட்டன. இதைக்கண்ட ஆமை, ஏன் இருவரும் வருத்தத்துடன் உள்ளீர்கள் என்று கேட்டது.

பல வருடங்களாக மழை பெய்யாத காரணத்தால் இந்த ஏறி வறண்டு வருகிறது. இன்னும் சில காலத்திற்கு பிறகு இங்கு முற்றிலும் நீர் வறண்டுவிடும். எனவே நாங்கள் இருவரும் பக்கத்துக்கு ஊரில் உள்ள ஏரிக்குச் செல்ல இருக்கிறோம் என்று வாத்துகள் கூறியது. என்னை விட்டு செல்வதற்கு உங்களுக்கு எப்படி மனம் வந்தது. நீர் குறைந்தால் உங்களுக்கு உணவு தான் குறையும், எனக்கோ உயிரே போய்விடும். என்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால் என்னையும் அழைத்துச் செல்லுங்கள், என்றது ஆமை. உனக்கு தான் இறக்கைகள் கிடையாதே! உன்னை அழைத்துப்போக எங்களால் எப்படி முடியும்? என்றது வாத்து.

அதற்கு ஆமை ஓர் உபாயம் செய்யலாம், ஒரு நீண்ட குச்சியை எடுத்து வாருங்கள். நான் நடுவில் என்னுடைய பற்களால் கொட்டியாய் பிடித்துக் கொள்கிறேன். நீங்கள் இருபக்கமும் பிடித்து தூக்கிக் கொண்டு பறந்து செல்லுங்கள், என்றது ஆமை. நாங்கள் உயரப்பறக்கும்போது நீ வாயைத்திறந்தால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என்று வாத்துகள் கூறியது.

அப்படியானால் பறக்கும்போது நான் வாய் பேசாமல் இருக்கின்றேன் என்று ஆமை கூறியது. இரு வாத்துகளும் இருபக்கமும் குச்சியை பிடித்து பறக்க நடுவில் ஆமை வாயில் பற்றிக்கொண்டு பறந்தன. சிறிது தூரம் பறந்தவுடன் ஆமை சந்தோஷத்தில் துள்ளிகுதிக்க ஆரம்பித்தது. இரு வாத்துகளும் ஆமையிடம் சிறிது நேரம் அமைதியாய் இரு. இல்லாவிடில் நீ கீழே விழுந்து விடுவாய், என்று கூறியது.

செல்லும் வழியில் வாத்துகள் ஆமையுடன் பறந்து செல்வதைப் பார்த்த மக்கள் வாத்துகள் எதையோ தூக்கிக்கொண்டு போகின்றன என கூச்சலிட்டனர். ஆமையின் கெட்ட நேரம் அந்த வார்த்தைகள் அதன் காதில் விழுந்தது. இந்த மக்கள் ஏன் இப்படி கூச்சலிடுகின்றனர் என வாய்திறந்து பேச அது பிடித்திருந்த பிடி விட்டுவிட கீழே விழத்தொடங்கியது. கீழே விழுந்த ஆமை உடல் சிதறி இறந்தது.

நீதி: வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்.

இன்றைய செய்திகள்

02.05.22

💧பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடப்பது வேதனையளிக்கிறது: உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

💧வானிலை முன்னறிவிப்பு: சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

💧ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு.

💧கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வதற்கு 12 ஆண்டுகள் ஆகும் என்றுரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

💧நிலக்கரி வாங்க பணமில்லை; 18 மணிநேரம் மின்வெட்டால் தவிக்கும் பாகிஸ்தான்: மக்கள் போராட்டம் .

💧ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் - பட்டம் வென்றார் கரோலினா மரின்.

💧மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: படோசாவை வீழ்த்தி 3 வது சுற்றுக்கு முன்னேறினார் ஹாலெப்.

Today's Headlines

💧 Student's misbehavior with teachers is very unfortunate: take proper action order by High Court. 

 💧Weather forecast: Chances of rain in some districts.

  💧General Manoj Pandey took charge as the new Chief of the Indian Army staff 

 💧The Reserve Bank of India has said it will take 12 years for India to recover from the economic damage caused by the corona.

 💧No money to buy coal;  Pakistan suffers an 18-hour power outage: People Started to protest.

 💧Carolina Marin wins European Championship Badminton title

💧 Madrid Open Tennis: Halep defeats Badosa to advance to the 3rd round.

 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive