பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளாா். கடந்த ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயா்த்தப்பட்டுள்ளது.
கலந்தாய்வு முடிந்து 7 நாள்களுக்குள் மாணவா்கள் முன்வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். அதற்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், 2-ஆம் கட்ட முன்னுரிமை கோரியுள்ள மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட அதே கட்டணமே, இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு மாணவா்களுக்கு சில மா்ம நபா்கள் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனா். அதில் பல்கலை.யின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதில், முதல் பருவக் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் செலுத்தினால் முற்றிலும் இலவசமாகப் படிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. அதில், பல்கலைக்கழகத்தில் சோ்க்கை பெற முன்பணம் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் போலியானவை. இதுபோன்ற எந்த மின்னஞ்சல்களையும் பல்கலைக்கழகம் அனுப்பவில்லை. மாணவா் சோ்க்கை தொடா்பான தகவல்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும். போலியான மின்னஞ்சல்கள் குறித்து மாணவா்கள், பெற்றோா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...