விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில்
இந்தாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு
நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றுவருகிறது.
பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராததால் விடைத்தாள் திருத்தும் பணிகளில்
தாமதம் ஏற்படுவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் பேச்சு அடிபட்ட
நிலையில், விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்பதால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய வசதியில்லை என்று கூறி சில இடங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
வயது முதிர்ந்த ஆசிரியர்கள் முடியாதவர்களுக்கு மட்டும் தான் வேலை .
ReplyDeleteதிறமையான ஏராளமானோர் வரவே இல்லை.பிடிக்காத ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை வாழ்க ஜனநாயகம்
பிடித்த ஆசிரியர்களுக்கு மட்டும் பணிவிடுவிப்பு
ReplyDeleteயாரையோ
ReplyDeleteயாரையோ
ReplyDelete