இன்ஜினியரிங் படிக்க நினைப்பவரா நீங்க?.. தமிழகத்தில் உள்ள 15 அரசு பொறியியல் கல்லூரி பட்டியல்

samayam-tamil

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மாணவர்கள் என்ன படிப்பது மற்றும் எந்த கல்லூரியில் படிப்பது என்று குழப்பம் அடைகிறார்கள். இந்நிலையில், இந்த ஆண்டு சேர்க்கைக்காக நுழைவு தேர்வுகளை பல கல்லூரிகள் நடத்துகிறது.

பொறியியல் ஆர்வலர்கள் சரியான கல்லூரியைத் தேர்வுசெய்ய உதவும் நம்பகமான வழிகாட்டியை இப்போது பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கணினி அறிவியல் பொறியியல் (CSE) திட்டத்தில் சேர்க்கைக்கான ஐந்தாண்டு சராசரி கட்-ஆஃப் மதிப்பெண்ணை அளவுகோலாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது.இதுவரை, கல்லூரியின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) முதலிடத்தில் உள்ளது.

CEG இன் ஐந்தாண்டு சராசரி கட்-ஆஃப் 200 மதிப்பெண்களுக்கு 198.90 ஆகும். குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இரண்டாவது இடத்தையும் (196.69), கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (196.65) மற்றும் சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி (195.50) இரண்டாவது இடத்தையும் பிடித்தன. தரவரிசை, முந்தைய ஆண்டுகளைப் போலல்லாமல், முதலிடம் பெற்றவர்கள் கல்லூரிகளை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.

உதாரணமாக, முதல் 100 ரேங்க்களில் 23 அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் தொகுதிக் கல்லூரிகள் உள்ளன. கல்வியாளர்கள் தங்கள் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அரசு நடத்தும் நிறுவனங்கள் மிகக் குறைவான கட்டணத்தை வசூலிப்பதால் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளின் பட்டியலை இங்கே காணலாம்:

1. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், கோயம்புத்தூர். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 185.52 ஆகும்.

2. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நீண்ட காலமாக உள்ள புகழ் பெற்ற கல்லூரியான இது, பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் என்று ஒரு பெயர் இருந்தது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 180.45 ஆகும்.

3. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காஞ்சிபுரம். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 175.40 ஆகும்.

4. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், மதுரை. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 172.00 ஆகும்.

5. அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், திருநெல்வேலி. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியின் ஐந்தாண்டு படிப்புக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 168.09 ஆகும்.

6. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், விழுப்புரம். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டு படிப்புகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 167.01 ஆகும்.

7. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற நாகர்க்கோயிலில் இருக்கிறது. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 162.95 ஆகும்.

8. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திண்டிவனம். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 157.48 ஆகும்.

9. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆரணி. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 157.38 ஆகும்.

10. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திண்டுக்கல். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 152.89 ஆகும்.

11. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பண்ருட்டி. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் பதினோராம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 148.38 ஆகும்.

12. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் பன்னிரெண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 148.27 ஆகும்.

13. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அரியலூர். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் பதிமூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 141.07 ஆகும்.

14. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ராமநாதபுரம். இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில், பதினான்காம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 132.30 ஆகும்.

15. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருக்குவளை. இந்த கல்லூரி தமிழகத்தின் சிறந்த 15 பொறியியல் உறுப்புக் கல்லூரிகளில் பதினைந்தாம் இடத்தை பிடித்துள்ளது. இக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கான சராசரி கட்-ஆஃப் மதிப்பெண் 130.76 ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய சிறந்த கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இந்த பட்டியல் பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive