Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு?



ஏஐசிபிஐ குறியீட்டு எண்களில் மிகப்பெரிய முன்னேற்றம்

அதற்குக் காரணம், DA மற்றும் Dearness Relief (DR) உயர்வுகளுக்கான எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு, எதிர்பார்த்ததை விட அதிகமாக உயர்வு இருக்கலாம் என்று மகிழ்ச்சியான செய்தியை சூசகமாக குறிப்பிட்டது.

பிப்ரவரி முதல், ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்திற்கான புள்ளிவிவரங்களின்படி குறைந்தது 6 சதவீதம் உயர்வு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

உண்மையில், அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டால், 7வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 40 சதவீதமாக உயரும். ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

தினசரி வாழ்க்கையில் மக்களின் செலவு அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், முதல் DA உயர்வு ஜனவரியிலும், அடுத்தது ஜூலை மாதத்திலும் வெளியிடப்படும்.  

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, மே மாத ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இம்முறை 1.3 புள்ளிகள் அதிகரித்து 129 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும், 6% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, ஒட்டுமொத்தமாக ஜூன் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு குறையவில்லை என்றால், அகவிலைப்படி 6% அதிகரிப்பது உறுதி என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜூலை 31 ஆம் தேதிக்குள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அதாவது, இம்முறை ஆகஸ்ட் மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive