பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய கேள்வி விவகாரம்.: துணைவேந்தர் விளக்கம்

IMG-20220715-WA0018

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வியால் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2,500 மாணவர்களும், இணைவுபெற்ற கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில், தற்போது இளநிலை மற்றும் முதுநிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் பருவ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதிலும், பெரியார் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு இரண்டாம் பருவ வரலாறு தேர்வு வினாத்தாளில் கேட்டப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது,  தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று கேள்விக்கு மஹர், நாடார், ஈழவர், அரிஜன் ஆகிய சமூக பிரிவுகளை குறிப்பிட்டு இதில் ஒரு பதிலை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதற்க்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த துணைவேந்தர் ஜெகந்நாதன், நேற்று நடந்த முதுகலை வரலாறு இரண்டாம் ஆண்டு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குறித்து விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இந்த வினாத்தாள், பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயார் செய்யப்பட்டதாகும் என துணைவேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive