பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையில் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 11 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...