Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.03.2023

 

    திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: அழுக்காறாமை

குறள் எண் : 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து.

பொருள்:
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்

பழமொழி :

People who live in glass houses should not throw stones.

கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கல் எறியக்கூடாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

ஒவ்வொருவர் சொல்லுக்கும் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கள் சாதிக்க முடியாது. செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

பொது அறிவு :

1. இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி எனப்படுபவர் யார்? 

 ராஜாராம் மோகன் ராய். 

 2. சிலம்புச்செல்வர் எனப்படுபவர் யார் ?

 ம .பொ. சிவஞானம்.

English words & meanings :

 laudable - worthy of high praise. adjective. Einstein's ideas are laudable. புகழப்படத்தக்க. பெயரடைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கடல் உணவுகளில் மீன், இறால், நண்டு வகைகளை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு சிப்பி உணவுகளை பெரும்பாலும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் சிப்பி உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக அதிகப்படியாக புரதச்சத்து, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் வைட்டமின் பி12 நிறைந்திருக்கின்றது.




கணினி யுகம்

Alt + F - File menu options in the current program. Alt + E - Edits options in the current program

நீதிக்கதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை. 


ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது. 


ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது. 


நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. 


காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று. 


ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது. 


கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது. 


நீதி :

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

29.03. 2023


* இ-சேவை மையங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

* மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம்,  1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* அனைத்து ஆய்வகங்களும் கரோனா பரிசோதனை விவரங்களை ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்.

* இந்தியாவில் 27 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளதாகவும், பத்து மாநிலங்களில் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

* “சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதை பார்க்கும்போது மனம் உடைகிறது” - ஆப்கன் சிறுமிகளின் துயரக் குரல்.

* ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: இங்கிலாந்து, போர்ச்சுகல் 2-வது வெற்றி.

* இந்தூர் ஆடுகளத்தின் மீதான நடவடிக்கையை தளர்த்தியது ஐ.சி.சி.

Today's Headlines

* Information Technology Minister Mano Thangaraj has said that sooner, 600 types of services will be provided in e-service centers.

 * 1 Crore female heads will be benefited through the Women's Entitlement Scheme.  Chief Minister M.K.Stalin has announced in the assembly that Rs.1,000 monthly assistance will be paid directly into their bank accounts.

 * All laboratories to upload details of corona tests on ICMR website said by Central Govt.

*  According to the central government, 27 crore people in India live below the poverty line and one in three out of ten states live below the poverty line.

 * “It breaks my heart to see boys go to school” - sad voice of Afghani girls.

 * European Football Qualifiers: England, Portugal  won 5 the match for second time .

 * ICC eases crackdown on Indore pitch
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive