NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.03.2023

   திருக்குறள் :

பால்: அறத்துப்பால், 

அதிகாரம்: அழுக்காறாமை, 

இயல் : இல்லறவியல், 

குறள் எண் : 163. 

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

விளக்கம்:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

பழமொழி :

Anybody can make history.

எந்த மனிதனும் வரலாறு படைக்கலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் வாழ்வில் எப்போதும் நேர்மையான முறையில் காரியங்கள் செய்ய முயல்வேன்.

2. என் நண்பர்கள் நேர்மையற்ற காரியங்கள் செய்ய அழைத்தால் நிச்சயம் துணை போக மாட்டேன்

பொன்மொழி :

பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.

பொது அறிவு :

1. தேனீக்களை மட்டும் தின்று உயிர் வாழும் பறவை எது? 

ராக்கட் பறவை . 

2.நுரையீரல் மூலம் சுவாசிக்கும் கடல் வாழ் உயிரினம் எது?

 திமிங்கலம்.

English words & meanings :

 kinswoman - female relative. noun. That lady doctor is my kinswoman. உறவுப் பெண்மணி. பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தினை மென்மையாக வைத்துக் கொள்வதற்கும், நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது. மேலும் சளி ,இருமலை குறைக்கக் கூடிய மருந்தாக இந்த கத்தரிக்காய் உள்ளது. மேலும் உடலில் அதிகமாக சேரும் இரும்பு சக்தியினை சமப்படுத்தவும் இது உதவுகிறது. கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலன் காக்கப்படும். சுவாச கோளாறுகள், கல்லீரல் பிரச்சனைகள், மூலம், அனைத்தையும் சரி செய்ய உதவுகிறது.

கணினி யுகம்

Alt + A

Set focus to the first icon in the Suggested actions menu.

Alt + F8

Show your password on the sign-in screen.


மார்ச் 27


உலக நாடக அரங்க நாள்  

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசியம்: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.


உலக நாடக அரங்க நாள் (World Theatre Day) ஆண்டுதோறும் மார்ச் 27 ஆம் நாளன்று பன்னாட்டு அரங்க நிறுவனத்தினால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.


யூரி அலெக்சியேவிச் ககாரின் நீதிக்கதை

கதை :
ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ, மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். 

ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது. 

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள். 

நீதி :
தனக்கு தெரிந்ததை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

27.03. 2023

* தமிழ்நாட்டில் H3N2 என்கிற இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் முற்றிலும் இல்லாத நிலை நோக்கி  சென்றுகொண்டிருக்கிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

* வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வுக்காக நிலத்தை அளவிடும் பணி தொடக்கம்.

* சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஜி-20 நிதி கட்டமைப்பு மாநாட்டில் பணவீக்கம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

* இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக் கோள்கள், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

* அமெரிக்க நாட்டின் மிசிசிப்பி மற்றும் அலபாமா மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த டொர்னாடோ சூறாவளி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 23 பேர் இதுவரை இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்.

* உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் நிகாத் ஜரீன் தங்கம் வென்று சாதனை.

* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீரர்கள்.

* ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: எம்பாப்பே தலைமையில் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி.

Today's Headlines

* Health and People's Welfare Minister M. Subramanian has said that the incidence of the H3N2 influenza virus in Tamil Nadu is on the verge of becoming completely non-existent.

 * Commencement of land surveying for phase 2 excavation at Vembakkottai.

 * Various issues including inflation, climate change, and energy were discussed in detail at the  G-20 Financial Framework Conference held in Chennai for about two days. 

 * 36 satellites belonging to UK's OneWeb were successfully launched from Sriharikota by GSLV Mark-3 rocket.

*  A powerful tornado caused severe damage in Mississippi and Alabama.  It was reported that around 23 people died due to this natural disaster.

 * World Women's Boxing: India's Nikath Zareen bags the gold

*  Indian players who won the Swiss Open Badminton Men's Doubles.

*  European football qualifier round: France won the first game under  the head of Mbappe
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive