NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலில் மாணவர்களின் நடத்தை மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இதுவரை பேசப்பட்டு இருக்கிறதா!

 


*ஆசிரியர்களின் வகுப்பறை கற்பித்தலில் மாணவர்களின் நடத்தை மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் இதுவரை பேசப்பட்டு இருக்கிறதா!!??????

*இப்போது ஏதோ ஒரு தூத்துக்குடியில் ஏதோ ஒரு பள்ளியில் ஒரு நிகழ்வு நடந்த உடன் அத்தனை பக்கமும் தீ பற்றி எரிகிறது. அந்த தூத்துக்குடி ஆசிரியரை போல் அடி மட்டும் தான் வாங்கவில்லை தவிர ஆசிரியர்களை வெறுப்பு கண்ணோடு பார்ப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது

*அதிலும் குறிப்பாக தொடக்கக் கல்வித் துறையில் பிரச்சனையை கண்டுபிடிக்க தான் 10 பேர் இருக்கிறார்கள், பிரச்சனைக்கு தீர்வு சொல்ல ஒருவர் கூட இல்லை

*SMC போன்ற விஷயங்கள் அற்புதமானவை தான். ஆனால் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் எல்லோரும் மிக உயர்ந்த வசதி படைத்தவர்கள் அல்ல .அப்படி இருப்பதால்தான் அரசு பள்ளிக்கு வருகிறார்கள் அது வேறு விஷயம். அவர்களை கற்றல் சார்ந்த கலந்துரையாடல்களுக்காக பள்ளிக்கு அழைத்தால் அவர்களின் ஒரே பதில் சார் நாங்கள் தினக்கூலிக்கு சென்று கொண்டிருக்கிறோம் அடிக்கடி வர முடியாது என்பதுதான் பதிலாக இருக்கிறது. சரி அதையும் மீறி கட்டாயப்படுத்தினால் அவர்களின் கோபம் நேரடியாக ஆசிரியர்கள் மீதுதான் திரும்புகிறது

*சரி அவர்களின் பிள்ளைகள் இப்படிப்பட்ட நடத்தைகளை வெளிப்படுத்துகிறார்கள், இவ்வளவு மோசமான வார்த்தைகளை எல்லாம் பேசுகிறார்கள் என்று சொன்னால் பெற்றோர்களின் பதில் நீங்கள் கண்டியுங்கள் சார். ஒரு சில பெற்றோர்களின் பதில் நீங்கள் அடியுங்கள் சார் என்பது .ஆனால் அப்படி அடித்து விட முடியுமா??? வேரை விட்டுவிட்டு விழுதை வெட்டுவது போல் ஆசிரியர்கள் கண்டிப்பது அப்போதைய தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை

*மாணவர்களை முழுதும் குற்றம் சாட்ட முடியாது. சமூகத்தில் YOUTUBE அது ,இதுவென்று திறந்தால் 95% மோசமான வீடியோக்கள் தான் . ட்ரெண்ட் வீடியோக்கள் வேறு. மாணவர்களின் சக நண்பர்கள், அவர்களை விட பெரிய நண்பர்கள், ஏன் பெற்றோர்கள் உட்பட எல்லோரும் பார்க்கிறார்கள். நாற்புறமும் அலைகள் அடிக்கும் போது மாணவனை ஆசிரியர் கூப்பிட்டு அன்பாக கடிந்து கொண்டால் அந்த அலையில் ஆசிரியர் தொலைந்து தான் போவார்

சரி என்ன தான் தீர்வு?? 

பள்ளிக்கு வரும் அதிகாரிகள் பதிவேடுகள் கேட்டால் எடுத்துக்காட்டி விட்டு ,அடுத்து மாணவர்களின் நடத்தை, உளவியல் சார்ந்த அத்தனை பிரச்சனைக்கும் தீர்வுகளை அவர்களிடமே கேளுங்கள்!!!.. அதிலும் தொடக்கக் கல்வித் துறையில் கல்வியில் புரட்சியாக app போன்றவை மூலம் மாணவர்களின் அத்தனை விஷயமும் கண்காணிக்க ஆசிரியர் பயிற்றுநர்கள் வருவார்கள். தினமும் வராத மாணவர்களின் பெற்றோர்களிடம் அவர்களை நேராக அழைத்துப் போய் அவர்கள் சொல்லும் விஷயங்களை கேட்க சொல்லுங்கள். வகுப்பறை கற்பித்தலில் ஒரு நாள் நடக்கும் நிகழ்வு வாரம் முழுவதும் தொடர்ச்சியாக இப்படித்தான் நடக்கும் என்பது கற்பனை.

*அதையும் மீறி நடத்தை பிரச்சனைகள் வெளிப்படும் மாணவர்களை மட்டும் அமர வைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் வகுப்பு எடுத்து கற்பித்தல் அணுகுமுறையை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் மனப்பூர்வமாக செய்ய தயாராகத்தான் இருக்கிறார்கள் ஆசிரியர்கள் தயங்குகிறார்கள் என்பது தான் அவர்களின் கவலை

*என்னதான் நாம் உளவியல் படித்திருந்தாலும் 10 ஆண்டுக்கு முன் மாணவர்களின் உளவியல் வேறு. இப்போதைய உளவியல் வேறு. அவர்களின் மனதில் எளிதாக ஊடுருவ ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களால் போதிய உளவியல் பயிற்சி உடன் மாணவர்களை அணுக முடியாது என்பது அல்ல... ஆனால் ஆசிரியர்களுக்கு கற்பிக்கவே நேரம் போதவில்லை!!!

*ஆக எளிமையான தீர்வாக குறைதீர் கற்பித்தல் என்று நாம் சொல்கிறோம் ஏன் அந்த குறை வந்தது என்று பார்த்தால் 70% க்கும் மேல் நடத்தை சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது .ஆகவே ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களின் நடத்தை ,உளவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இன்றைய சூழலுடன் ஒருங்கிணைத்து வழங்கப்பட வேண்டும்

*அதையும் தாண்டி  கற்பிக்கும் ஆசிரியர்களின் உளவியல் பிரச்சனை தன்னை முழுதாக கற்பிக்கவிடாமல் பதிவேடுகள் தன் நேரத்தை விழுங்குகிறது என்பது போல தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். என்ன ஆனாலும் நம் மாணவர்களின் எதிர்காலம் நமக்கு முக்கியம். எத்தனை பிரச்சனைகள் எந்த திசையில் இருந்து வந்தாலும் அரசு பள்ளி மாணவர்கள் நாளைய சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய ஆசிரியர்கள் ஆகிய நாம் இதுவரை செய்தது போல் அந்த அறப்பணியை அர்ப்பணித்து செய்யத்தான் போகிறோம். ஏனெனில் அரசு பள்ளி நம் பள்ளி... அது நம் பெருமை

 

Thanks to Mr. Ragu Rajini





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive