NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற அமைச்சரிடம் கோரிக்கை!

IMG-20230330-WA0005

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னை தியாகராய நகரில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கு.தியாகராஜன் கோ.காமராஜ், ஆ.இராமு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இதில் மருத்துவர்களுக்கு உள்ளதை போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.  மத்திய அமைச்சரவை உயர்த்த முடிவெடுத்துள்ள 4 % அகவிலைப்படி உயர்வை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 01.01.2023 முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.  மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் மற்றும் அனைத்து வகை ஆசிரியரின் ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும்.          சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை விரைவில் விடுவிக்க வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறை பழைய முறைப்படியே வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2004-06 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை ஊதியத்தை தவிர வேறு எந்த பண பலனும் இன்றி பணிபுரிந்து வரும் சுமார் 1500க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் .

EMIS இணையதளத்தை கையாள அதற்கென தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்வித் துறையில் குறிப்பாக டிபிஐ வளாகத்தில் அவுட்சோர்சிங் முறையில் பல்வேறு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டுள்ளது. அவற்றை இரத்து செய்து நிரந்த பணியாளர்களை நியமிக்க வேண்டுகிறோம். 

சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் அளித்தனர். குறிப்பாக பணி பாதுகாப்பு சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தப்பட்டது அனைத்தையும் கனிவோடு கேட்டு அறிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பணிப்பாதுகாப்பு சட்டம் குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக உறுதி அளித்திருக்கிறார் கூடுமானவரை இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே பணிப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்துள்ளார் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி

ஒருங்கிணைப்பாளர்கள்

 தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive