Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிட்டோ-ஜாக் சார்பில் இன்று ( 7.9.2023 ) நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்ட பிரதானமான கோரிக்கைகள்:

மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..


டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்:


டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை  5.30 மணி அளவில் இணைய வழியில் நடைபெற்றது.

அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


வருகிற 11.9.2023 திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு தமிழகம் முழுவதும்  மாவட்டத்தலைநகரில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


பிரதானமான கோரிக்கைகள்:


👉(1) எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

புதன்,வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்கவேண்டும்.


👉 (2)B.Ed படிக்கும் பயிற்சி  மாணவர்களை கொண்டு  பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்தக்கூடாது.

👉 (3) EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும்.


👉(4) ஆசிரியர்களை(RP) கருத்தாளர்களாக நியமிக்கக்  கூடாது.


👉(5) விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக்கூடாது.

 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற உள்ளது.. கோரிக்கைகளை வென்றெடுக்க ஆர்ப்பாட்டக்களம் நோக்கி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்யுமாறு களப்பணி ஆற்றிட டிட்டோஜா நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட செயலாளர் பெருமக்கள், வட்டாரச் செயலாளர் பெருமக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்..

இவண்..

 சு.குணசேகரன்

மாநிலத் தலைவர்

வி எஸ் முத்துராமசாமி

 பொதுச் செயலாளர்

சே.நீலகண்டன்

 மாநில பொருளாளர்

ஜே எஸ் ஆர் மாளிகை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,,

பெல்ஸ் ரோடு, சென்னை.





1 Comments:

  1. Nothing will happen. What about pension ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive