Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET பதவி உயர்வு வழக்கின் இறுதி தீர்ப்பு எப்போது?

SupremeCourtWikimediaCommons
 TET Promotion Case judgment is surely expected this month.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கின் இறுதி தீர்ப்பு 03-04-2025 Judgement Reserved செய்யப்பட்ட நிலையில் , இந்த மாதம் (JULY 2025 ல் ) கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றம் 14-07-2025 ல்  திறந்தவுடன் ,முதல் 10 வேலை நாட்களுக்குள் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் மிக நீண்ட நாட்களாக அதாவது , கடந்த 3 கல்வி ஆண்டுகளாக (2022-23,   2023-24  &  2024-25 ) இழுபறியாக உள்ள பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், நிலுவையில் உள்ள பதவி உயர்வு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாகவும் உச்ச நீதிமன்றத்தின்  இந்த தீர்ப்பு அமைய உள்ளது. 

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழு வீச்சில் ,எந்தவித பாரபட்சமும் இன்றி, எவ்வித பாகுபாடும், வேறுபாடும் இன்றி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை கருத்தில் கொண்டு, முழுமையான சட்ட விதிகளுக்கு மற்றும் தீர்ப்புக்கு உட்பட்டு எவ்வித  தொய்வோ/கால தாமதமோ இன்றி , மாணவர்களின் கல்வி நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசின் அனைத்து மாநில கல்வித் துறைகளுள், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஒரு சிறந்த முன்னோடி மாநிலமாக எல்லா விதத்திலும் விளங்கிட வேண்டும் என்ற உயர்ந்த, ஒற்றை நோக்கத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை,பதவி உயர்வுக்கு சட்ட விதிகளின்படி முழு தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு (அவர்கள் யாராக இருந்தாலும் ) வழங்கிட வேண்டும் என்ற சரியான பாதையில், உடனடியாக தீர்ப்பினை நடைமுறைக்கு கொண்டு வர , சமூக நீதியை தன் உயிர் மூச்சாக கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, 

முழு வீச்சில், 100% தயார் நிலையில் உள்ளது மற்றும் பதவி உயர்வு விஷயத்தில் இனியும் தேவையற்ற கால தாமதங்களை நிகழ்த்தி விடக்கூடாது என்பதிலும்,உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்த்திடல் வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு அரசு மிக உறுதியாக உள்ளது என்ற தகவல்களை நம்பத்தகுந்த பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மிகத்தெளிவாக அறிய முடிகிறது.

இன்று தேதி :- 01-07-2025 (செவ்வாய் )

தீர்ப்பு வரும் என்ற மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்படும் நாட்கள்:-14-07-2025 to 25-07-2025





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive