அரசு
தேர்வுகள் இயக்குநர் சசிகலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல்
மற்றும் மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய
பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் 26-ம் தேதி (இன்று) பிற்பகல் வெளியிடப்படுகிறது.
பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் இன்று பிற்பகல் முதல் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...