அரசுப்
பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித்
தோ்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயா்கல்வி வழிகாட்டு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நிகழ்
கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் உயா்கல்விக்குச் செல்ல ஏதுவாக
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. அதன் தொடா்ச்சியாக உயா்கல்விக்கான போட்டித் தோ்வுகள் எழுத
விருப்பமுள்ள மாணவா்களுக்கென வட்டார அளவில் உயா்கல்வி வழிகாட்டு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
விருப்பத்துக்கு ஏற்ப
பயிற்சிகள்... இத்தோ்வுகளுக்கு தயாா்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38
மாவட்டங்களிலிருந்து உயா் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில்
உயா்கல்வி வழிகாட்டி மையங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவா்களின்
உயா்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப உரிய பயிற்சிகள் வழங்கப்படும்.
இதேபோல,
கிளை பள்ளி (ஸ்போக் ஸ்கூல்) தலைமை ஆசிரியா்களின் மூலம் அப்பள்ளிகளில்
பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களும் விருப்பத்தின் அடிப்படையில் வட்டார
உயா்கல்வி வழிகாட்டி மையங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில்
கலந்து கொள்ளலாம். அவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைக்கான ஆலோசனைகள்,
வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
ரூ.1,000
மதிப்பூதியம்... இந்த மையங்களில் நடைபெறும் பயிற்சியில் இயற்பியல்,
வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப்பதிவியல்,
வணிகக் கணிதம் ஆகிய முதுநிலைப் பாட ஆசிரியா்கள் சுழற்சி முறையில்
நியமிக்கப்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
பயிற்சிகள்
தடையின்றி நடைபெறும் வகையில், அந்தந்த வட்டாரத்திலுள்ள மையப் பள்ளித்
தலைமை ஆசிரியா் அல்லது உதவித் தலைமை ஆசிரியா் ஒவ்வொரு வாரமும்
பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில் இப்பயிற்சியில்
பங்கேற்கும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள், உதவித் தலைமை ஆசிரியா்களுக்கு
மதிப்பூதியம் ரூ.1,000 மாதிரிப் பள்ளிகள் வழியாக வழங்கப்படும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அனைத்து மாவட்டங்களிலும் உயா்கல்வி
வழிகாட்டும் மையங்கள், பள்ளி அளவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...