இதுதொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎட் மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்தஆண்டு முதல்முறையாக இணையவழி கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் உள்ள 2,040 இடங்களுக்கான இணையவழி கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களுக்கான விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி (இன்று) ஆன்லைனில் வழங்கப்படும்.
மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆகஸ்ட் 14 முதல் 19-ம் தேதி வரை சேர்ந்துகொள்ளலாம். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளிலும் முதல் ஆண்டு பிஎட் வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...