தமிழகத்திற்கு
வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிட கோரிய தமிழக
அரசின் மனு மீது மத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் செயலர் சார்பில்,
வழக்கறிஞர் அடுத்த விசாரணையின் போது ஆஜராக வேண்டும்' என, உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் 'பி.எம்.,ஸ்ரீ' திட்டத்தினை தமிழக அரசு ஏற்காமல் இருப்பதால், 'சமக்ரா சிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 2,291 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருப்பதாகவும், இந்த தொகையை உடனடியாக, 6 சதவீத வட்டியுடன் விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தர விட கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...