தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த மருத்துவமனைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாவட்ட சுகாதார சங்கங்கள் மூலம் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியாளர் தேர்வாணை யம் (எம்.ஆர்.பி) சார்பில், அந்த வருடத்தில் நடத்தக்கூடிய தேர்வுகள், காலிப்பணியிட எண்ணிக்கை, தேர்வு முறை, தேர்வு அறிவிப்பு வெளியாகும் மாதம், தேர்வு நடைபெறும் மாதம் குறித்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இது தேர்வர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு தேர்வு வழக்கு தயாராக உதவியாக இருந்து வருகிறது.
இதனிடையே மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில்,
2025ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், உதவி பல் மருத்துவர், என உதவியாளர் என மொத்தம் 6,530 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 12 பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. ஹோமியோபதி உதவி மருத்துவர், சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர், நர்சிங் உதவியாளர், ரேடியகிராபர், இருமுறை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் அக்டோபர் மாதங்களுக்குள் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு எம்ஆர்பி இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...