Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC jobs: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

reads-down-1755521235
 குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 1936 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர். 
 
இந்த தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.
குரூப் 2ஏ பதவியில் பதவிக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. இதில் 20,033 பேர் பங்கேற்றனர். தேர்வர்கள் முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி கடந்த மே 5 ஆம் தேதி வெளியிட்டது.

இந்நிலையில் அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கடந்த ஜூலை 28 ஆம் தேதி தொடங்கியது, சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த முதல் கட்ட கலந்தாவு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 2 மற்றும் 2A தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2006 நாளன்று சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுலகத்தில் நடைபெற உள்ளது.

மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள் நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பானை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive